உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு 

சிவகங்கை : மல்லல் ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் தொகுப்பூதியத்தில் முதுகலை பட்டதாரி (இயற்பியல்) ஆசிரியர் பணியிடம் நிரப்ப விண்ணப்பம் வரவேற்பதாக ஆதிதிராவிடர் நல அலுவலர் சி.சுரேஷ்குமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இப்பள்ளியில் காலியாக உள்ள ஒரு இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு பள்ளி மேலாண்மை குழு மூலம் தொகுப்பூதிய சம்பளமாக மாதம் ரூ.18,000 வழங்கப்படும். இதற்குரிய கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக இருப்பவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மற்றும் பட்டியலினத்தவருக்கும், பள்ளியின் அருகே வசிப்பவருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இப்பள்ளிக்கு உரிய ஆசிரியர் பணியிடம் நிரப்பும் வரை அல்லது இக்கல்வி ஆண்டு இறுதி தேர்விற்கு முந்தைய மாதம் வரை இப்பணியில் இருக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் விண்ணப்பம், கல்வி சான்றுடன் ஜூலை 5ம் தேதி மாலை 5:45 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி