உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரியக்குடியில் புதரில் துணை சுகாதார நிலையம்

அரியக்குடியில் புதரில் துணை சுகாதார நிலையம்

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் இடிந்த நிலையில், கிராம சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது.சாக்கோட்டை வட்டாரத்தில் புதுவயல் பீர்க்கலைக்காடு, ஓ. சிறுவயல், கோட்டையூர் ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 24 துணை சுகாதார நிலையங்களும் செயல்படுகின்றன. இதில் துணை சுகாதார நிலைய கட்டடம் பராமரிப்பின்றி கிடக்கிறது.செவிலியர்கள் கிராமங்களில் தங்கி கர்ப்பிணிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளும் தடுப்பூசியும் வழங்க வேண்டும். அரியக்குடி ஊராட்சியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் திங்கள் மற்றும் புதன் கர்ப்பிணி, குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.இங்குள்ள துணை சுகாதார நிலைய கட்டடம் முற்றிலும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் புதர்க்காடாக காட்சியளிக்கிறது.இதனால் தற்காலிகமாக கிராம சேவை மைய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மருத்துவ வசதி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. எனவே புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.மருத்துவ அதிகாரிகள் கூறுகையில்: அரியக்குடியில் உள்ள துணை சுகாதார நிலைய கட்டடம் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளதால் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. பழைய கட்டடம் அகற்றப்பட்டதும் புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை