உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கடல் தாண்டி வசிக்கும் காரைக்குடி மக்களின் மாட்டு வண்டிப்பயணம்: பாரம்பரியம் காப்பதில் ஆர்வம்

கடல் தாண்டி வசிக்கும் காரைக்குடி மக்களின் மாட்டு வண்டிப்பயணம்: பாரம்பரியம் காப்பதில் ஆர்வம்

மேலுார்: மதுரை மாவட்டம் அழகர்கோவில் ஆடித் தேரோட்டத்தில் கலந்து கொள்ள வெளிநாடுகளில் வசிக்கும் காரைக்குடியை சேர்ந்தவர்கள் பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டிகளில் பயணித்தனர்.காரைக்குடி கே. வேலங்குடி கிராமத்தை சேர்ந்த இவர்கள் அழகர்கோவிலில் ஜூலை 21ல் நடக்கும் தோரோட்டத்திற்காக ஜூலை 17ல் மாட்டு வண்டியில் புறப்பட்டனர். அவர்களுடன் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோரையும் மேலுார் வழியாக அழைத்து சென்றனர். இன்று (ஜூலை 19) அழகர்கோவிலை அடைகின்றனர். ஜூலை 20ல் முடிகாணிக்கை செலுத்தி தீர்த்தமாடுவர். பிறகு கிடா வெட்டி பொங்கல் வைத்து அன்னதானம் வழங்குவர். ஜூலை 21 ல் தேர் இழுத்த பின் சொந்த ஊருக்கு திரும்ப உள்ளனர்.பயண ஒருங்கிணைப்பாளர் செல்வமணி கூறியதாவது: நுாறாண்டுகளுக்கு முந்தைய முன்னோரின் பாரம்பரியத்தை கடைபிடிக்கவே மாட்டு வண்டி பயணத்தை மேற்கொள்கிறோம். இவ் வழிபாட்டை இறைவனுக்கு செய்யும் கடமையாகவும், முன்னோர்களுக்கு செய்யும் மரியாதையாகவும் கருதுகிறோம். இதில் கலந்து கொள்ள சிங்கப்பூர், மலேசியா, குவைத் உள்பட பல வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளோம். இந்த பயணத்திற்காக வண்டிகள் தயாரித்து, மாடுகள் வாங்கியுள்ளோம். பொருளாதாரம், பழக்க வழக்கங்களில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் இப் பயணத்தை விரும்பி தொடர்கிறோம். இதன் மூலம் பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகரிப்பதோடு மனதுக்கு அமைதி கிடைக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை