| ADDED : ஜூலை 31, 2024 05:00 AM
சிவகங்கை : காளையார்கோவில், கண்ணங்குடி வட்டத்தில் ஆக., 1 அன்று மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: காளையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட மல்லல், நாடமங்கலம், அதப்படக்கி, உடைகுளம், செங்குளம், செம்பனுார், பெரியகண்ணனுார் ஆகிய கிராமங்களுக்கு சாத்தரசன்கோட்டை சமுதாயக்கூடத்திலும், கண்ணங்குடி வட்டாரத்தில் உள்ள கண்ணங்குடி, கே.சிறுவனுார், கண்டியூர், கொடுவூர், கங்கனி, சித்தனுார், அனுமந்தக்குடி, தத்தனி, திருப்பாக்கோட்டை கிராமங்களுக்கு கண்ணங்குடி அரசு மேல்நிலை பள்ளியில் காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கும் முகாமில், மக்கள் அனைத்து துறை சார்ந்த புகார்களை தெரிவித்து, தீர்வு பெற்று செல்லலாம், என்றார்.