உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆன்லைன் விண்ணப்பம் மூலம் ‛கொடிநாள் நிதி வசூல் * போக்குவரத்து ஆணையரகம் திட்டம்

ஆன்லைன் விண்ணப்பம் மூலம் ‛கொடிநாள் நிதி வசூல் * போக்குவரத்து ஆணையரகம் திட்டம்

சிவகங்கை:வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் விண்ணப்பம் மூலமே ‛கொடி நாள் நிதி' வசூலையும் மேற்கொள்ள போக்குவரத்து ஆணையரகம் திட்டமிட்டுள்ளது.வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு லைசென்ஸ் எடுத்தல், புதுப்பித்தல், புதிய வாகன பதிவு உட்பட வாகனம் சார்ந்த அனைத்து பணிகளுக்கும் விண்ணப்ப கட்டணத்துடன் ரூ.50, ரூ.100 என ‛கொடிநாள் நிதி' வசூலிக்கப்படும். அந்த தொகைக்கு அரசு வழங்கிய கொடியை வழங்குவர். ஆனால் சில இடங்களில் கொடியை வழங்காமலேயே கொடி நிதி வசூலிப்பதாக அரசுக்கு புகார் சென்றது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து போக்குவரத்து ஆணையரகம் திட்டமிட்டுள்ளது.

* ஆன்லைனில் ‛கொடி நிதி' வசூல்:

தற்போது வாகன பதிவு, லைசென்ஸ் எடுத்தல், புதுப்பித்தல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கப்படுகிறது. விசாரணைக்கு பின் லைசென்ஸ், வாகன பதிவு சான்றுகளை வட்டார போக்குவரத்து அலுவலர், ஆய்வாளர்கள் கையொப்பமிட்டு வாகன உரிமையாளர் முகவரிக்கே பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கின்றனர். இனி, இதே விண்ணப்பத்தில் ஆன்லைன் மூலம் கொடி நிதியையும் வசூலிக்க உள்ளனர். இதன் மூலம் கொடி நிதி வசூலில் புரோக்கர் தலையீடு, முறைகேட்டை தவிர்க்க முடியும் என போக்குவரத்து ஆணையரகம் தெரிவிக்கிறது.

* விரைவில் திட்டம் அமலாகும்:

வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியதாவது: ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே, கொடி நாள் நிதியையும் வசூலிக்க வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பயிற்சியும் அளித்துள்ளனர். விரைவில் இத்திட்டம் அமலுக்கு வரும். ஆன்லைனில் வசூலாகும் தொகை முன்னாள் ராணுவ வீரர் நல நிதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை