உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை நகராட்சியில் ஒரே மாதத்தில் ரூ.1.50 கோடி வசூல்

சிவகங்கை நகராட்சியில் ஒரே மாதத்தில் ரூ.1.50 கோடி வசூல்

சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் ஒரே மாதத்தில் ரூ.1.50 கோடி ரூபாய் வசூல் செய்து நகராட்சி ஊழியர்கள் சாதனை படைத்துள்ளதாக நகராட்சி கமிஷனர் கிருஷ்ணாராம் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிவகங்கை நகராட்சியில் 18,022 வீடுகள் உள்ளது. இவற்றில் 6902 குடிநீர் இணைப்புகள் உள்ளது. நகராட்சிக்கு சொந்தமாக 115 கடைகள் உள்ளது. 1020 சிறு வணிகர்கள் தொழில் செய்து வருகின்றனர்.சொத்துவரி கடந்த ஆண்டு 2023--2024 மார்ச் வரை ரூ. 6 கோடியே 56 லட்சத்து 73 ஆயிரம் வசூல் செய்ய வேண்டி இருந்தது. இதில் 4 கோடியே 94 லட்சத்து 95 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் 115 ல் 83 லட்சத்து 49 ஆயிரம் வாடகை பாக்கியிருந்தது. இதில் 81 லட்சத்து 30 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொழில் வரியாக 1,020 சிறு வணிக நிறுவனங்களில் 70 லட்சத்து 54 ஆயிரம் வசூல் செய்ய வேண்டியதில் 62 லட்சத்து 15 ஆயிரம் வசூல் ஆகி உள்ளது.6902 குடிநீர் இணைப்பில் 85 லட்சத்து 34 ஆயிரத்திற்கு, 48 லட்சத்து 47 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் மட்டும் ரூ1.50 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022-23ல் நகராட்சி சார்பில் 64 சதவீதம் வரி வசூல் செய்த நிலையில் இந்த முறை 83.08 சதவீதம் வரி வசூல் செய்துள்ளோம். இந்த முறை நகராட்சிக்கு வரவேண்டிய மாநில நிதி ரூபாய் 3 கோடி முறையாக நமது நகராட்சிக்கு வந்துவிடும். இந்த நிதியை நகராட்சியின் பல வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் வரும் காலங்களில் மக்கள் தங்கள்செலுத்த வேண்டிய வரிபாக்கியை நகராட்சிக்குமுழுமையாக செலுத்தினால் நகராட்சியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை