உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாசன வயல்களை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள்

பாசன வயல்களை ஆக்கிரமித்த சீமைக்கருவேல மரங்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பாசன வயல்களில் ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற முடியாமல் விவசாயிகள் அவதியில் உள்ளனர்.இத்தாலுகாவில் கடந்த ஆண்டு பரவலாக விவசாயம் நடைபெறாத நிலையில் பல வயல்களில் சீமைக்கருவேல மரங்கள்வளர்ந்துள்ளன. விவசாயிகள் தற்போது விவசாயி பணிகளை துவக்க சிரமப்படுகின்றனர். பெரிய அளவில் வளர்ந்துள்ள மரங்களை மண் அள்ளும் இயந்திரம்மூலம் அகற்ற ஏக்கருக்கு10 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இதனால் அந்த வயல்களின் விவசாயிகள் விவசாயப் பணிகளில் இறங்காமல் கவலையில் உள்ளனர். சில இடங்களில் சிறிய அளவில் வளர்ந்துள்ள மரங்களை விவசாயிகள் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு அகற்றி வருகின்றனர். இருந்தாலும் இச்செடிகளின் வேர் ஆழமாக செல்வதால்வயல்களில் தோண்டி எடுக்க சிரமப்படுகின்றனர். பாசன வயல்களில் இம்மரங்களை அகற்ற வேளாண்மைத் துறை சார்பில் நிதி ஒதுக்கீடு இருக்கும் நிலையில் அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டம் சென்று சேர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி