உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரதவீதியில் இருட்டு; பக்தர்கள் அச்சம்

ரதவீதியில் இருட்டு; பக்தர்கள் அச்சம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி ரத வீதியில் நிலவும் இருட்டால் பக்தர்கள் அச்சமடைந்துஉள்ளனர்.இப்பேரூராட்சி பகுதியில் உள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் ரத வீதிகளில் சில இடங்களில் தெருவிளக்கு வசதி இல்லை. குறிப்பாக மேற்குரத வீதியில் ஒரு சில விளக்குகள் இருந்தும்அவை மரக்கிளைகளுக்குள் அமைந்து விட்டதால் அப்பகுதி முழுவதும் இருட்டாக உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவ்வழியாக வரும்போது அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மாலை நேரத்துக்கு பிறகு ரதவீதிகளில் 'குடி'மகன்கள் அட்டகாசம் ஒருபக்கம், மர்ம நபர்களின் நடமாட்டம் இன்னொரு பக்கம் என பக்தர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே நான்கு ரத வீதிகளிலும் தேவையான இடங்களில் தெருவிளக்குகளை பொருத்த பேரூராட்சி, கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை