உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரசாரத்தில் தனி நபர் விமர்சனம் கூடாது: தேர்தல் கமிஷன் எச்சரிக்கை 

பிரசாரத்தில் தனி நபர் விமர்சனம் கூடாது: தேர்தல் கமிஷன் எச்சரிக்கை 

சிவகங்கை : தேர்தல் பிரசாரத்தின் போது தனிப்பட்ட நபரின் வாழ்க்கை பற்றி பேசக்கூடாது என வேட்பாளர், அரசியல் கட்சியினரை தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் 39 தொகுதி யில் ஏப்.19 ல் ஒரே கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக கட்சிகள் அறிவித்த வேட்பாளர், சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன்படி மற்ற அரசியல் கட்சியினர் குறித்து விமர்சனம் செய்வதாக இருந்தால், அவரது கட்சியின் முந்தைய செயல்பாடு, கொள்கை, திட்டம், பணிகள் குறித்து மட்டுமே பேசவேண்டும். வேட்பாளர், கட்சி தலைவர், தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, பொது நடவடிக்கைக்கு தொடர்பில்லாத விஷயங்களை விமர்சித்து பேசக்கூடாது.கோயில், சர்ச், மசூதிகளில் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுத்தல், வாக்காளர்களை பயமுறுத்துதல், ஆள்மாறாட்டம், ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு அப்பால் தான் பிரசாரம் செய்ய வேண்டும்.ஏப்.,17க்கு பின் பொதுக்கூட்டம் நடத்த கூடாது. வாகனங்களில் வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்லக்கூடாது. அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர் திட்டமிட்ட பாதையில் மட்டுமே ஊர்வலமாக சென்று ஓட்டு சேகரிக்கலாம். தேர்தலன்று வாக்காளர், தேர்தல் கமிஷனில் அனுமதி பெறாத யாரும் ஓட்டுச்சாவடிக்குள் செல்லகூடாது. ஆட்சியில் உள்ள கட்சியினர் தேர்தல் நடைமுறைகளில், அலுவலக அதிகாரத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அமைச்சர்கள் தேர்தல் பயணத்தின் போது தனது அலுவலக பயணமாகவோ, அலுவலக ஊழியர்கள், அரசு வாகனங்களை பயன்படுத்த கூடாது என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை