உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் ரூ.39 கோடியில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணி

மானாமதுரையில் ரூ.39 கோடியில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணி

மானாமதுரை : மானாமதுரை நகராட்சியில் ரூ.39 கோடி செலவில் புதிதாக குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.மானாமதுரைக்கு ராஜகம்பீரம் வைகை ஆற்றில்இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு 4500க்கும் மேற்பட்ட வீடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 30 வருடங்களுக்கு முன்பு பதிக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்ததால் அவ்வப்போது மானாமதுரையில் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பேரூராட்சியாக இருந்த மானாமதுரை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து மானாமதுரையில் குடிநீர் திட்ட பணிகளை விரிவாக்கம் செய்ய நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் வேண்டுகோள் விடுத்ததைதொடர்ந்து தமிழக அரசு ரூ.39 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த பிப்ரவரியில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் குடிநீர் மேம்பாட்டு பணியை துவக்கிவைத்தார். அனைத்து பகுதிகளிலும் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு 27 வார்டுகள், அனைத்து விரிவாக்க பகுதிகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றன.நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி கூறியதாவது:ராஜகம்பீரம் தலைமை குடிநீரேற்று நிலையத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.அதே போன்று நகருக்குள் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட உள்ளன.இப்பணிகள் நிறைவு பெற்ற பின் 27 வார்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் அனைத்து விரிவாக்க பகுதிகளிலும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி