உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையை குளிர்வித்த மழை   விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கையை குளிர்வித்த மழை   விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகங்கை: காரைக்குடியில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் அதிகபட்சமாக 44.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.மாவட்டத்தில் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, அவ்வப்போது மழை கை கொடுத்து வந்தது. இருப்பினும் போதிய மழையின்றி சிவகங்கையில் அனல் காற்று, வெயிலின் உச்சம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், கோடை விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். மேலும், ஆங்காங்கே குடிநீர் பிரச்னையும் ஏற்படும் நிலை உருவானது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் மழைக்கு பின் குளிர்ந்த காற்று வீச தொடங்கியுள்ளது.காரைக்குடியில் அதிகபட்சமாக 44.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக திருப்புவனத்தில் 36.20, திருப்புத்துார் 15.40, சிவகங்கை 15.20, சிங்கம்புணரி 8.40 மி.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.நல்ல மழை பெய்து குளிர்ச்சியாக காணப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலால் மக்கள் அவதிக்குள்ளாகினர். கடந்த 2 நாட்களாக மேகங்கள் ஒன்று கூடி வந்தாலும் மழை பெய்யாமல் போனது. நேற்று மதியம் 3:30 மணிக்கு பெய்ய துவங்கிய மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.இதனால் மானாமதுரையில் ரோடுகளிலும்,தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை