உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாராக மாறும் காந்தி பூங்கா

பாராக மாறும் காந்தி பூங்கா

தேவகோட்டை : தேவகோட்டையில் மகாத்மா காந்தி வந்து பேசியதன் நினைவாக அந்த இடம் காந்தி திடல் என்றும் காந்தி பூங்கா ஒன்றும் உள்ளது.பூங்காவில் காந்தி சிலையும் உள்ளது. சில அமைப்புகள் சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உட்பட முக்கிய தினங்களில் மரியாதை செய்வதை சில ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சிலர் காந்தி பூங்காவை திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். இது சம்பந்தமாக ஏற்கனவே போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.சுதந்திரத் தினத்தன்று கூட குடிகாரர்கள் விடவில்லை. நேற்று முன்தினம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிலர் கொண்டாடி விட்டு சென்றனர்.கொண்டாடி சென்ற ஒரு மணி நேரத்தில் சில இளைஞர்கள் வழக்கம் போல் மரத்தை சுற்றி கட்டப்பட்டுள்ள சிமென்ட் தளத்தில் மது அருந்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ