உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசனுார் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

அரசனுார் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

சிவகங்கை: அரசனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அம்மையப்பர் குழுமத்தின் சமூக பொறுப்புத்திட்டம் மூலமாக ரூ.36.65 லட்சத்தில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் சிவராமன் திறந்து வைத்தார்.புதிய வகுப்பறை மற்றும் கலையரங்க திறப்பு விழா நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் தலைமை வகித்தார். சிவகங்கை நகராட்சி தலைவர் துரைஆனந்த் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் சிவராமன் திறந்து வைத்தார்.பர்ஸ்ட் கார்மென்ட்ஸ் மேனுபேக்சரிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனர் வி.ஹரிதாஸ், நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன், மூத்த அலுவலர் அஹசய்பாய், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளாபாலச்சந்தர், தாசில்தார் சிவராமன், தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி, வட்டாரக்கல்வி அலுவலர் பாலாமணி, ஊராட்சித் தலைவர் செல்வராணி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாரிமுத்து, வக்கீல் மோகனசுந்தரம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை