| ADDED : ஏப் 23, 2024 12:07 AM
காரைக்குடி : காரைக்குடியில் இருந்து மதுரைக்கு கூடுதலாக இடைநில்லா பஸ்களை இயக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடியில் இருந்து மதுரை, தேனி, கோயம்புத்துார், திருப்பூர், நாகர்கோவில், திருச்சி, ராமேஸ்வரம், திருநெல்வேலிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு தினமும் 9 முறை ஏ.சி., பஸ்களும், 33 முறை இடைநில்லா பஸ்சும் ஓடுகின்றன. அரசு, தனியார் என 120 பஸ்களை வரை ஓடுகின்றன.ஆனால், காரைக்குடியில் இருந்து மதுரைக்கு ஒரு ஏ.சி., பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.ஒரு சில இடைநில்லா பஸ்கள் மட்டுமே ஓடுகின்றன. காரைக்குடியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவம், வர்த்தக நோக்கத்திற்காக மதுரைக்கு சென்று வருகின்றனர்.ஆனால், பயணிகள் வருகைக்கு ஏற்ப போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே காரைக்குடியில் இருந்து மதுரைக்கு கூடுதலாக ஏ.சி., பஸ்கள், இடைநில்லா பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.