| ADDED : மே 30, 2024 03:30 AM
திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே பெரிச்சிக்கோவில் சுகந்தவனேஸ்வரர் (எ) ஆண்டபிள்ளை நாயனார் சமீபவல்லி அம்பாள் கோயிலில் ஜூன் 9ல் கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. கல்லல் ஒன்றியம் பெரிச்சி கோயில் கிராமத்தில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் கி.பி.13 ம் நுாற்றாண்டில் சோனாடு சுந்தரபாண்டிய மன்னரால் எழுப்பப்பெற்றது. இறைவனாக சுகந்தவனேஸ்வரர், இறைவியாக சமீபவல்லி அம்பாள் எழுந்தருளியுள்ளனர். பரிவார தெய்வங்களில் வயிரவசுவாமி, ஒற்றைச் சனீஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தரால் வழிபட்ட தலம் ஆகும்.இக்கோயிலின் அனைத்து சன்னதிகளும், கோபுர, விமானங்களும் திருப்பணி நடந்து ஜூன் 9ல் கும்பாபிே ஷகம் நடைபெற உள்ளது. கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை ஜூன் 7ல் காலை 8:30 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடந்து பூர்ணாகுதி தீபராதனை நடைபெறும். மாலை 5:00 மணிக்கு யாகசாலையில் கலசங்கள் நிறுவப்பெற்று முதல்கால யாகசாலை பூஜை நடைபெறும்.ஜூன் 8 காலை 8:30 மணிக்கு 2ம் காலயாக பூஜை, மாலை 5:30 மணிக்கு 3ம் காலயாக பூஜை நடைபெறும்.ஜூன் 9ல் காலை 6:30 மணிக்கு 4ம் கால யாகபூஜை துவங்குகிறது. கோ பூஜை, லட்சுமி பூஜை நடந்து பூர்ணாகுதிக்கு பின் கோபுர, விமானங்களுக்கு காலை 9:10 மணிக்கு கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. ஏற்பாட்டை அழ. கருப்பையா, டாக்டர் சேதுகுமணன், எஸ்பிஎம்.ஆறுமுகம், அழ.கரு. மணிகண்டன், சி.வைரமணி, எஸ்.கோட்டைச்சாமி, தேவஸ்தான மேலாளர் ம. இளங்கோ, கண்காணிப்பாளர் டி.ரவிச்சந்திரன் செய்கின்றனர்.