மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
17 hour(s) ago
பயிற்சி முகாம்
17 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
17 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
17 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
17 hour(s) ago
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை, வழிப்பறியில் ஈடுபடுவோரை பிடிப்பதில் போலீசாருக்கு சிரமமாக உள்ளது. காளையார்கோவில் அருகேயுள்ள நெடுவத்தாவு பிச்சை மனைவி லட்சுமி 60. இவர் ஜூன் 9ம் தேதி பேத்தியுடன் வீட்டிற்கு சென்றார். பின்னால் வந்த நபர்கள் லட்சுமி அணிந்து இருந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர். மதகுபட்டி - - தச்சம்புதுப்பட்டி ரோட்டில் சிங்கினிப்பட்டியை சேர்ந்த பாண்டித்துரை பைனான்ஸ் மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வாட்ச்மேன் இல்லாத நேரம் லாக்கரை உடைத்து ஒரு கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இதுவரை கொள்ளையர்களை பிடிக்க வில்லை.காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் டாஸ்மாக் ஊழியரிடம் மிளகாய் பொடி துாவி ரூ.2.67 லட்சம் கொள்ளையடித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நேற்று முன்தினம் தேவகோட்டை அருகே பாவனக் கோட்டையில் நாகாடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் காவலாளியை தாக்கி ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளனர்.மானா மதுரையில் வைகை ஆற்றை ஒட்டி உள்ள ஜீவா நகரை சேர்ந்த முத்து என்பவர் வீட்டை உடைத்து 58 பவுன் தங்க நகை மற்றும் 17 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர். திருமாஞ்சோலையில் உள்ள ஒரு வீட்டிலும் நபர்கள் நகையை திருடி சென்றுள்ளனர். தொடர்ந்து இரண்டு மாதமாக கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய எந்த குற்றவாளியையும் போலீசார் பிடிக்கவில்லை.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago