உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரைக்கு தாமதமாக வரும் மதுரை-ராமேஸ்வரம் ரயில்: பயணிகள் அவதி

மானாமதுரைக்கு தாமதமாக வரும் மதுரை-ராமேஸ்வரம் ரயில்: பயணிகள் அவதி

மானாமதுரை: மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மானாமதுரையில் தாமதமாக புறப்படுவதால் அரசு ஊழியர்கள், மாணவர்கள்,பயணிகள் சிரமப்படுகின்றனர்.மதுரையிலிருந்து தினமும் ராமேஸ்வரத்திற்கு செல்லும் பயணிகள் ரயில் தற்போது பாம்பன் பாலத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் ராமநாதபுரம் வரை செல்கிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 6:50 மணிக்கு புறப்பட்டு 7:50 மணிக்கு மானாமதுரை வந்து 8:00 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் செல்லும். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தினமும் மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயில் மானாமதுரைக்கு காலை 8:00 மணியிலிருந்து 8:15 மணிக்கு தான் வருகிறது.மானாமதுரை ஸ்டேஷனிலிருந்து கிளம்புவதற்கு காலை 8:30 மணிக்கும் மேல் ஆவதால் ராமநாதபுரம் செல்வதற்கு தாமதம்ஏற்படுகிறது. பரமக்குடி,சத்திரக்குடி,ராமநாதபுரம், மண்டபம்,பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து ரயில் பயணி டேவிட் 39,கூறியதாவது: கடந்த 3 மாதங்களாக இந்த ரயில் மானாமதுரையில் இருந்து கிளம்புவதற்கு சுமார் அரை மணியிலிருந்து ஒரு மணி நேரம் தாமதம் ஆவதால் ராமநாதபுரம் செல்வதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஆகிறது. உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள்,மாணவர்கள அவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஆகவே ரயில்வே நிர்வாகம் இந்த பயணிகள் ரயிலை உரிய நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ