உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூலாங்குறிச்சியில் 160 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு

பூலாங்குறிச்சியில் 160 காளைகள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு

திருப்புத்தூர் : திருப்புத்தூர் ஒன்றியம் பூலாங்குறிச்சியில் அங்காள பரமேஸ்வரி, கணவாய் கருப்பர் அபிேஷக, ஆராதனை விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.பூலாங்குறிச்சியில் இக்கோயில்களில் வைகாசி மாதத்தில் அபிேஷக, ஆராதனை விழாவை முன்னிட்டு வாடிவாசல் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம்.காலை 9:00 மணிக்கு கோயில்களில் வழிபாடு முடிந்து கிராமத்தினர் ஊர்வலமாக வந்து தொழுவிற்கு தீபாராதனை காண்பித்தனர். தொடர்ந்து தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, தாசில்தார் மாணிக்கவாசகம், டி.எஸ்.பி., ஆத்மநாதன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி வாசித்தனர். தொழுவிலிருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டன. இதில் 160 காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளையின் உரிமையாளருக்கு பரிசு வழங்கினர்.

மஞ்சுவிரட்டுக்கு எதிர்ப்பு

பூலாங்குறிச்சி கோயில் மரியாதை சம்பந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 4 கரை மற்றும் 5 கரை ஆகிய இரு தரப்பாக ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு மஞ்சு விரட்டு நடத்தி வருகின்றனர்.இதில் ஐந்துகரையில் ஒரு தரப்பினர் மஞ்சுவிரட்டு நடத்துவதில் தங்களை சேர்ப்பதில்லை என்று கூறி அதிருப்தி தெரிவித்து நேற்று காலை வாடிவாசல் முன்பு அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களிடம் அடுத்த மாதம் 25 ம் தேதி அதற்கான சமாதானக் கூட்டம் நடத்துவதாக கூறி சமாதானம் செய்து வைத்தனர். அவர்கள் கலைந்து சென்றதும் மஞ்சுவிரட்டு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி