உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டப் பள்ளிக் கல்வித்துறையும் தமிழக திறன் மேம்பாட்டுகழகமும் இனணந்து பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான கல்லுாரி கனவு என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை காளையார்கோவில் புனித மைக்கேல் கல்லுாரியில் நடத்தியது. இதில் 68 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 1384 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர்மோகனச்சந்திரன் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். கூடுதல் எஸ்.பி., கலைக்கதிரவன் முன்னிலை வகித்தார். உயர் கல்வி வழிகாட்டி நிபுணர் கலைமணி கருணாநிதி சட்டம் மற்றும்மருத்துவம் சார்படிப்பு, நீட் தேர்வு சார்பான விழிப்புணர்வு பீர்க்கலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் முத்துராமலிங்கம் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.பேராசிரியர் தங்கசங்கர்பொறியியல் துறை, பேராசிரியர் உதயகுமார் கலை மற்றும் அறிவியல்படிப்பு, பேராசிரியர் ஜூலியட்மேரி மடோனா கலை மற்றும் அறிவியல்கல்லுாரி, வேங்கடகிருஷ்ணன் பாலிடெக்னிக்மற்றும் ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புனித மைக்கேல் கல்லுாரி சேர்மன் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் பேசினார். பள்ளி கல்வியின் உதவித்திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு, தனியார் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலர் பொன் சரவணகுமார் கலந்து கொண்டனர். இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை