உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சொத்து தகராறில் கொலை: 3 பேர் கைது

சொத்து தகராறில் கொலை: 3 பேர் கைது

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே ஓசாரிபட்டியை சேர்ந்தவர் ராமன் மகன் முத்துக்குமார் 37. இவருக்கும் அவரது சித்தப்பா சந்திரன் 50, என்பவருக்கும் சொத்து தகராறு இருந்துள்ளது. மார்ச் 27 அன்று சந்திரனின் மனைவியிடம் முத்துக்குமார் சொத்து குறித்து தகராறு செய்துள்ளார். முத்துக்குமாரை சந்திரன் மகன் சதீஷ், உறவினர் விக்னேஷ் இருவரும் தாக்கியதில் காயமடைந்துள்ளார்.இது குறித்த புகாரில் சதீஷ், விக்னேஷ் இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்துவிட்டு போதையில் இருப்பதால் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இந்நிலையில் நேற்று மாலை முத்துக்குமாரை அவரது சித்தப்பா சந்திரன், சதீஷ், உறவினர் அழகு 65, ஆகிய மூவரும் தாக்கியதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். மூன்று பேரையும் சிங்கம்புணரி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !