உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆபத்தான நிலையில் மேல்நிலை தொட்டி

ஆபத்தான நிலையில் மேல்நிலை தொட்டி

தேவகோட்டை: கண்ணங்குடி ஒன்றியம் சித்தானுார் கிராமத்தில் ரேஷன் கடை எதிரில் இரண்டு ஆழ்துளை கிணறு அமைத்து இரண்டு குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு 200 வீடுகளுக்கு குடிநீர் செல்கிறது.இதில் ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அடிப்புற சிமென்ட் பூச்சு உதிர்ந்து கம்பி தெரிகிறது. ஆபத்தான நிலையில் உள்ள தொட்டி இருக்கும் இந்த வழியில் தான் ரேஷன் கடைக்கும் , ஊருக்குள் செல்ல வேண்டும்.தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்து வீணாகி குளம் போல் தேங்கி நிற்கிறது ஒன்றிய பொறியாளர் சித்தானுார் குடி நீர் தொட்டியை ஆய்வு செய்து மராமத்து பணி மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி