உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பட்டமங்கலத்தில் பங்குனி தேரோட்டம்

பட்டமங்கலத்தில் பங்குனி தேரோட்டம்

திருக்கோஷ்டியூர், : பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர், அழகு சவுந்தரியம்மன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் கிராமத்தினர் பலர் பங்கேற்றனர்.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 16 ல் காப்பு கட்டி விழா துவங்கியது. தினசரி காலையில் கேடகத்தில் அம்மன் திருவீதி புறப்பாடும், இரவில் வாகனங்களில் வீதி உலாவும் நடந்து வருகிறது.நேற்று காலை 8:15 மணிக்கு விநாயகருக்கும்,அம்மனுக்கு தண்டபாணி குருக்கள் தலைமையில் பூஜை நடந்து தேர்களுக்கு சுவாமி புறப்பாடானது. தொடர்ந்து அம்மன், விநாயகர் தேர்களில் எழுந்தருளினர். பின்னர் பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். மாலை 5:00 மணிக்கு பூஜை துவங்கி, தேருக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் தேரோட்டம் துவங்கியது.இரவில் மண்டகப்படி பூஜை நடந்து காமதேனு வாகனத்தில் சுவாமி திருவீதி வலம் வந்தது. இன்று காலையில் மஞ்சுவிரட்டும், இரவில் பூப்பல்லக்கும், நாளை காலையில் ரிஷப வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும். இரவில் ஊஞ்சல் விழாவுடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !