உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கடலை பயிர் மேலாண்மை பயிற்சி

கடலை பயிர் மேலாண்மை பயிற்சி

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம்சேவினிப்பட்டியில் புன்செய் விவசாயிகளுக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி முகாம் நடந்தது. திருப்புத்துார் வட்டார அளவிலான விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் அட்மா - விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சண்முகஜெயந்தி விவசாயிகளுக்கு வேளாண் திட்டங்களான ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம், பசுந்தாள் உரம் இடுதல் திட்டம், உழவர் பயிற்சி நிலைய திட்டங்கள் குறித்து விளக்கினார். உதவி இயக்குனர் செந்தில்நாதன் பேசுகையில், மண்மாதிரி சேகரித்து மண் ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் உரமிடுதலின் முக்கியத்துவத்தையும், மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்தும் விளக்கினார். சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் மதியழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ