உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடை உழவு செய்து நிலத்தை தயாராக்குங்கள்  இணை இயக்குனர் தகவல்

கோடை உழவு செய்து நிலத்தை தயாராக்குங்கள்  இணை இயக்குனர் தகவல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: ஆண்டு தோறும் இம்மாவட்டத்தில் 1 லட்சம் எக்டேரில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகின்றன.இங்கு பெரும்பாலும் பருவ மழையை நம்பியே விவசாயம் இருக்கும். கோடையில் பெய்யும் மழையை வைத்து கோடை உழவு செய்து நிலத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோடை உழவானது பயிர் அறுவடை செய்தவுடன் செய்ய வேண்டும்.நிலச்சரிவு பகுதியில் குறுக்காகவும், மணற்பாங்கான நிலத்தில் மேலாகவும் உழவு செய்ய வேண்டும்.2 முதல் 3 ஆண்டிற்கு ஒரு முறை சட்டி கலப்பை கொண்டு உழுதிட வேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திறன் வரும். மண் அரிமானம் தடுக்கப்படும். முதற் பயிரின் துார்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படும்.கடலை சாகுபடி செய்யும் விவசாயிக்கு பெரும் பிரச்னையாக உள்ள சிவப்பு கம்பளிப்புழு அழிக்கப்படும்.மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தவிர்க்கப்படும். கோடை மழை பெய்யும் பட்சத்தில் மாவட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களை கோடை உழவு செய்து கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்