உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மதுவிலக்கு கோரி  ஆர்ப்பாட்டம்  

மதுவிலக்கு கோரி  ஆர்ப்பாட்டம்  

சிவகங்கை : தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழர் தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிபடி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி, சிவகங்கையில் தமிழர் தேசம் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் வைரவேல் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் சந்தோஷ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் குட்டி, மோகன், செல்லப்பாண்டி உட்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் கால வாக்குறுதிபடி முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை