உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஒன்பது,10 வகுப்பு மாணவிகளுக்கு உதவித்தொகை 

ஒன்பது,10 வகுப்பு மாணவிகளுக்கு உதவித்தொகை 

சிவகங்கை : மத்திய அரசு பங்களிப்புடன், 9 மற்றும் 10 ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய அரசின் நிதி பங்களிப்புடன், அரசு பள்ளிகளில் கடந்த 2022- - 23 மற்றும் 2023-24ம் ஆண்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு படித்த பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவிகளின் வங்கி கணக்கிற்கே, மாநில அரசு ஆண்டுக்கு ரூ.4,000 வீதம் உதவித்தொகை வழங்குகிறது.இதற்காக தேசிய வங்கி அல்லது தபால் நிலையங்களில் வங்கி கணக்கு துவக்க வேண்டும். இது குறித்து விபரம் பெற கலெக்டர் அலுவலக வளாக தரைத்தளத்தில் உள்ள மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ