உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேங்காய் பறிமுதல்

தேங்காய் பறிமுதல்

சிவகங்கை: சிவகங்கை பறக்கும் படை தாசில்தார் மகாதேவன் தலைமையிலான குழுவினர் இடையமேலுார் பஸ் ஸ்டாப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் 7 டன் தேங்காய் இருந்துள்ளது. டிரைவர் ராஜேஷ் 25, உரிமையாளர் சுப்புராஜிடம் விசாரித்ததில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியிலிருந்து நத்தம் செல்வதாக கூறினர். உரிய ஆவணத்தை காட்டி வண்டியை எடுத்துச்செல்லுமாறு டிரைவரிடம் அறுவுறுத்தி தேங்காயை பறிமுதல் செய்து சிவகங்கை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை