உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்ட த.மா.கா., பிரிப்பு

சிவகங்கை மாவட்ட த.மா.கா., பிரிப்பு

காரைக்குடி : சிவகங்கை மாவட்டத்தில் த.மா.கா, வடக்கு, தெற்கு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிவகங்கை மாவட்ட த.மா.கா., மாவட்ட தலைவராக கே. பாலசுப்பிரமணியம் இருந்து வந்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் த.மா.கா., பிரிக்கப்பட்டு இரு தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.தற்போது, சிவகங்கை மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக ஆர். ராஜலிங்கம் தெற்கு மாவட்ட தலைவராக பி.பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளனர். காரைக்குடியில் புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் துரை கருணாநிதி, முன்னாள் எம்.பி., உடையப்பன், தெற்கு மாவட்ட தலைவர் கே. பாலசுப்பிரமணியன், மாநில இணைச்செயலாளர் செல்வரங்கன், செயற்குழு உறுப்பினர் சித்திக், காரைக்குடி நகரத்தலைவர் முத்துவேல், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை