உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்கள் கலந்துரையாடல்

மாணவர்கள் கலந்துரையாடல்

திருப்புத்துார் : திருப்புத்துாரில் உலக புவிதினத்தை முன்னிட்டு காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி மாணவர்கள் 11வது வார்டு அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர். மாணவர் புவனேஸ்வரன் வரவேற்றார். 'பூமியும் பிளாஸ்டிக்கும்' என்ற தலைப்பில் மாணவர்களிடையே கலந்துரையாடல் துவங்கியது. மேலும் தற்போதைய புவியின் சூழல் குறித்தும், மாசுபடாமல் அதை பாதுகாப்பது குறித்தும் விவாதித்தனர். புவி வெப்பமயமாதல், குறையும் வனப்பரப்பு, சுற்றுச்சூழல் மாசு குறித்தும் கலந்துரையாடினர். மாணவர் விஸ்வஹரிஹரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ