உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருத்தளிநாதர் கோயிலில் உற்சாகப்படுத்திய சுப்புலெட்சுமி

திருத்தளிநாதர் கோயிலில் உற்சாகப்படுத்திய சுப்புலெட்சுமி

திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் பக்தர்கள் நுழைந்தவுடன் இடது புற மண்டபத்தில் நிற்கும்சிவகாமி என்று பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படும் அந்த கோயில் யானையை தரிசித்த பின்னரே கோயில் மூலவர் மண்டபம் சென்று தரிசனம் செய்வர்.திரும்பி வரும் போதும் யானைக்கு பழம் தந்து உபசரித்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவதுண்டு.இதெல்லாம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை தான். சிவகாமி உடல் நலமிழந்து இறந்த பின்னர் எல்லாம் மாறி விட்டது. பல ஆண்டுகளாக உலா வந்த கோயில் யானை இல்லை.இருந்தாலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பழக்க தோஷத்தில் இடது புறம் திரும்பி 'சிவகாமி' இல்லாத அதன் மண்டபத்தை பார்த்து ஒரு வித ஏக்கத்துடன் சாமி தரிசனம் செய்யத் துவங்கி விட்டனர்.இந்நிலையில் கோயிலில் வைகாசி விசாக விழாவிற்கு வந்த பக்தர்கள் வழக்கம் போல் திரும்பி இடது புறமாக யானை மண்டபத்தை பார்க்க அங்கு 'சிவகாமி' நின்று தனது உடலையும்,வாலையும், காதையும் அசைந்து நிற்பதைப் பார்த்து ஒரு கணம் திகைத்தனர். விசாரிக்கையில் விழாவிற்காக குன்றக்குடி கோயிலிலிருந்து வந்த 'சுப்புலெட்சுமி' யானை என்பது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை