உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதியின்றி அவதி 

சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதியின்றி அவதி 

சிவகங்கை : சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பறை, லிப்ட் செயல்பாடின்றி முடங்கி கிடப்பதால், பயணிகள் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.சிவகங்கை வழியாக ராமேஸ்வரம் - வாரணாசி, சென்னை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட முக்கியநகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மாவட்ட தலைநகரான இங்கிருந்து தான் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, மானாமதுரைக்கு அதிகளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகள் வருகைக்கு ஏற்ப இது வரை முழு அளவில் அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து தரவில்லை. ரயில்வே ஸ்டேஷன் பின்னால் தனியார் பங்களிப்புடன் அமைத்த நவீன கழிப்பறை செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது. ஸ்டேஷனில் 2 மற்றும் 3வது பிளாட்பாரத்தில் தரைத்தளம் அமைக்கும் பணி மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. வயது முதிர்ந்த, மாற்றுத்திறனாளி பயணிகளுக்கென சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் அமைக்கப்பட்ட 'லிப்ட்' செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது.தெற்கு ரயில்வே நிர்வாகம் சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனுக்கு உரிய வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ