உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டாஸ்மாக் தொழிற்சங்கம் போராட்டம்

டாஸ்மாக் தொழிற்சங்கம் போராட்டம்

சிவகங்கை: காளையார்கோவில் அருகே புளியடிதம்பம் டாஸ்மாக் மதுக்கடை சூப்பர்வைசர், விற்பனையாளர் மீது வழக்கு பதிந்ததை கண்டித்து டாஸ்மாக் அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் சிவகங்கையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.புளியடிதம்பம் அரசு மதுக்கடை சூப்பர் வைசர் ஜெயக்குமார், விற்பனையாளர்கள் சரவணன், நாராயணன். இவர்கள் மூன்று பேர் மீதும் விஷ நெடியுடன் கூடிய சாராயம் விற்பனை செய்ததாக காளையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக்கோரி நேற்று சிவகங்கை டாஸ்மாக் பொது மேலாளர் அலுவலகம் முன், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் திருமாறன் தலைமை வகித்தார். தொ.மு.ச., மாவட்ட துணை தலைவர் சேவியர் அருள்துரை, செயலாளர் வேல், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் மலைராஜ் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாநில துணை பொது செயலாளர் முருகன் சிறப்புரை ஆற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர் மெய்யப்பன், பொது செயலாளர் குமார், பாண்டி உட்பட அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். டாஸ்மாக் மண்டல மேலாளர் சிவக்குமார், தாசில்தார் கிருஷ்ணகுமார் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒருவாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டத்தை கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை