உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா

தென்மாப்பட்டு புரவி எடுப்பு விழா

திருப்புத்துார், : திருப்புத்துார் தென்மாப்பட்டு ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவில் கிராமத்தினர் பங்கேற்றனர்.ஜூன் 21ல் கிராமத்தினர் கிராம சவுக்கையில் ஒன்று கூடினர். தொடர்ந்து வேளாருக்கு புரவி அமைக்க பிடி மண் வழங்கப்பட்டது. ஜூலை 5 மாலை ஆதினமிளகி அய்யனார் கோயில் முன்பாக உள்ள சேங்கை ஊருணியில் வெட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம் கிராமத்தினர் ஒன்று கூடி சின்னையா கோயிலிலிருந்து சாமி அழைத்து ஊர்வலமாக புதுப்பட்டி சென்றனர்.நேற்று மாலை 6:00 மணிக்கு சாமி அழைப்புடன் புரவி பொட்டலில் கூடினர். பின்னர் புரவிகளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து புரவிகளை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இன்று காலை சாமி அழைத்து மஞ்சுவிரட்டுடன் புரவி எடுப்பு விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை