உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம்

இடிந்து விழும் நிலையில் சமுதாயக்கூடம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் மு.சூரக்குடி ஊராட்சி எஸ்.கோவில்பட்டியில் உள்ள சமுதாயக்கூடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சில ஆண்டுகளிலேயே இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் உள்ளே செல்லாதவாறு கட்டடம் பூட்டப்பட்டது. சுவரில் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன் அருகே ரேஷன் கடை உள்ளதால் மக்கள் ஆபத்தான முறையில் கூடுகின்றனர். பாழடைந்த சமுதாய கூட கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை