உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தமிழக போலீசாருக்கு குடியிருப்பு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்

தமிழக போலீசாருக்கு குடியிருப்பு இடம் தேர்வு செய்யும் பணி தீவிரம்

திருப்புவனம், தமிழகம் முழுவதும் போலீசாருக்கு குடியிருப்பு கட்ட ஆங்காங்கே இடம் தேர்வு செய்து அறிக்கை வழங்க காவல்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, போதை பொருள் தடுப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகள் காவல் துறையில் இயங்கி வருகின்றன. ஊராட்சி ஒன்றிய அளவிலும், பெரிய கிராமங்களிலும் காவல் நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். ஆனால் போதிய போலீஸ் குடியிருப்புகள் இல்லாததால் போலீசார் வெளியே வாடகைக்கு வீடு தேடி அலைய வேண்டியுள்ளது.வேலை செய்யும் இடம் ஓரிடத்திலும், குடியிருப்பு வேறிடத்திலும் இருப்பதால் பணியில் முழுமையாக ஈடுபட முடிவதில்லை, அவசர பணிக்கு போலீசாரை அழைக்க முடியவில்லை. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் குடியிருப்புகள் இல்லாத காவல் நிலையங்கள் எத்தனை, அந்தந்த காவல் நிலையங்களை ஒட்டி காலி இடம் உள்ளதா, அல்லது அரசு புறம்போக்கு இடம் உள்ளதா, அப்படி இருந்தால் காவல் நிலையத்தில் இருந்து எவ்வளவு துாரத்தில் உள்ளது. தற்போது குடியிருப்புகள் உள்ள நிலையில் அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களுக்கு போதிய அளவில் குடியிருப்புகள் உள்ளதா என அறிக்கை அனுப்ப காவல் துறை உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 47 காவல் நிலையங்கள் உள்ளன. அதில் மானாமதுரை கோட்டத்தில் திருப்புவனம், பூவந்தி, மானாமதுரை, சிப்காட் தவிர்த்து திருப்பாச்சேத்தி, பழையனூர் உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு குடியிருப்புகள் இல்லை .அதிலும் பிரச்னைக்கு உரிய திருப்பாச்சேத்தியில் போதிய இடம் இருந்தும் குடியிருப்புகள் இல்லாதது சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத இறுதிக்குள் சென்னை தலைமையகத்திற்கு அறிக்கை அனுப்ப உத்தரவிட்டுள்ள நிலையில் தேர்தல் முடிந்த உடன் முதல் கட்டமாக காவலர் வீட்டு வசதி கழகம் மூலமாக இடம் உள்ள காவல் நிலையங்களில் குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை