உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொல்லங்குடியில் தீர்த்தவாரி உற்ஸவம்

கொல்லங்குடியில் தீர்த்தவாரி உற்ஸவம்

சிவகங்கை : கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 19ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மார்ச் 27ல் தேரோட்டம் நடந்தது. 10ம் நாளான நேற்று, காலை 10:35 மணிக்கு அலங்காரத்தில் அம்மன் தெப்பக்குளத்தில் எழுந்தருளினார். சூலாயுதத்திற்கு மஞ்சள், நவ திரவிய அபிேஷகம், தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது. இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா வந்தார். இன்று காலை சுவாமி விடையாற்றி வெள்ளி ஊஞ்சல் உற்ஸவமும், இரவு தங்கரத புறப்பாடும் நடக்கிறது. கோயில் செயல் அலுவலர் நாராயணி விழா ஏற்பாட்டை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ