உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / செயினை பறிக்க முயற்சி

செயினை பறிக்க முயற்சி

தேவகோட்டை : தேவகோட்டை வீரபாண்டியபுரம் உறவினர் வீட்டுக்கு செல்ல புதுக்கோட்டை மாவட்டம் எச்சிக்கோட்டை முத்துமணி மனைவி ரேகா குழந்தையுடன நேற்று மாலை அரசு பஸ்சில் தேவகோட்டை வந்தார்.பஸ்சில் இருந்து இறங்கியவர் முதலில் குழந்தையை கீழே இறக்கி நிறுத்தி விட்டு பொருட்களை எடுக்க மீண்டும் பஸ்சில் ஏறினார். பொருட்களுடன் இறங்கிய ரேகா குழந்தையை காணாமல் அதிர்ச்சியுற்று தேடினார். பஸ்சில் ஏறி பார்த்த போது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் குழந்தையை துாக்கி வைத்துக்கொண்டு அமர்ந்து இருந்தார். ஏன் குழந்தையை துாக்கினாய் என கேட்ட போது அந்த நபர் தப்பி விட்டார். குழந்தையை கடத்தி செயினை பறிக்க முயற்சி நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை