உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெண் பலாத்கார வழக்கில் இருவருக்கு 20 ஆண்டு சிறை

பெண் பலாத்கார வழக்கில் இருவருக்கு 20 ஆண்டு சிறை

சிவகங்கை:திருப்புவனத்தில் கத்தியைக்காட்டி மிரட்டி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இருவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிவகங்கை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே டி.அதிகரை பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது பெண். இவரது கணவர் மதுரையில் பணிபுரிந்தார். சக்குடியில் உள்ள தோப்பு வீட்டில் இரு குழந்தைகளுடன் இப்பெண் வசித்து வந்தார். 2014 ஜூலை 12 இரவு சக்குடியை சேர்ந்த சேவுகன் மகன் அழகர்பாண்டி 33, அம்மாசி மகன் காளி (எ) காளிமுத்து 32, இவரது வீட்டிற்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி இவரை பலாத்காரம் செய்தனர். மானாமதுரை மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மகிளா நீதிமன்ற நீதிபதி ஆர்.கோகுல் முருகன் முன் நடந்தது. குற்றவாளிகள் இருவருக்கும் தலா 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, கத்தியை காட்டி மிரட்டியதற்கு 1 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார். இதை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அரசின் இழப்பீடு தொகை பெறலாம் என தெரிவித்தார்.அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயநிர்மலா ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை