உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முத்துாரில் குவாரிக்கு எதிர்ப்பு   கலெக்டரிடம் கிராமத்தினர் புகார்  

முத்துாரில் குவாரிக்கு எதிர்ப்பு   கலெக்டரிடம் கிராமத்தினர் புகார்  

சிவகங்கை: காளையார்கோவில் ஒன்றியம், முத்துாரில் கிராவல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரி கிராமத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், முத்துாரில் 300 க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு முற்றிலும் விவசாய தொழிலை நம்பியே உள்ளனர்.ஏற்கனவே இக்கிராம எல்லையில் உள்ள புதுக்கண்மாயில் குவாரி அமைத்து அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மண் எடுத்ததால், கடந்த 4 ஆண்டாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் குடிநீரின்றி வறட்சி, 9 கண்மாய்களுக்கு நீர்வரத்தின்றி போனது. அந்த பாதிப்பில் இருந்து விவசாயிகள் மீண்டு வருவதற்குள், அதன் அருகிலேயே மற்றொரு கிராவல் குவாரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முத்துார் கிராம எல்லையில் வீரமுத்துப்பட்டி, அய்யனார்குளம், மேப்பல், மோர்குழி, அரியநாச்சி குடியிருப்பு, குருவாடிப்பட்டி கிராமத்தினர் விவசாயம் செய்து வருகின்றனர். எனவே விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் இங்கு மேலும் ஒரு கிராவல் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது என கலெக்டர் ஆஷா அஜித்திடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை