உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு

கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து வாகனங்களில் விற்பனையாகும் குடிநீரை வாங்குகின்றனர். இதன் விலை அதிகரித்துள்ளதால் கிராமத்தினர் சிரமப்படுகின்றனர்.கோடை வெயிலால் பல குடிநீர் ஊரணிகள் வற்றத் துவங்கியுள்ளன.அதில் திருப்புத்துார் அருகே பனையம்பட்டி குடிநீர் ஊரணியும் ஒன்று. பனையம்பட்டி மட்டுமின்றி சுற்றுப்புறக் கிராமத்தினரும் சுவைக்காகவும், சமைக்க நன்றாக இருக்கும் என்பதற்காகவும் இந்த ஊரணி நீரை பயன்படுத்தி வந்தனர்.அண்மையில் நீர் வற்றி சகதியாகி விட்டதால் பயன்படுத்த முடியவில்லை. இதனால் குடம் ரூ. 13 க்கு வாகனத்தில் வரும் நீரை வாங்கி பயன்படுத்தினர். சில நாட்களுக்கு முன்பு குடம் ரூ.15 ஆக அதிகரித்து விற்றதற்கு கிராமத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிராமங்களில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை