| ADDED : ஜூலை 20, 2024 12:04 AM
காரைக்குடி : லோக்சபா தேர்தல் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட எஸ்.ஐ., மற்றும் போலீசார் மீண்டும் தங்களது பணியிடத்திற்கு மாற்றுவது எப்போது என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.தமிழக முழுவதும் லோக்சபா தேர்தலையொட்டி இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தேர்தலை நடத்தை விதிமுறைகளை பின்பற்றும் வகையில் பணியிட மாற்றம் நடந்த நிலையில், தேர்தல் முடிந்தும் இதுவரை மீண்டும் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை.தேர்தலுக்குப் பின்பு மீண்டும் போலீசாரை பணியிட மாற்றம் செய்வதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடப்பதாக தகவல் வெளியானது. தற்போது சிவகங்கை மாவட்டத்தில், இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., மற்றும் போலீசார் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. தங்களது குடும்பத்தை விட்டு வேறு இடத்திற்கு மாறிச் சென்ற போலீசார் சிரமப்படுகின்றனர்.