| ADDED : ஜூன் 16, 2024 10:30 PM
திருப்புத்தூர் : திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.அகில உலக யோகா தினம் ஜூன் 21ல் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைவர் ஏ.டி.விக்டர் முன்னிலை வகித்தார். திருப்புத்தூர் பிரம்ம குமாரிகள் யோகா மையத்தின் பிரம்மகுமாரி வீரலெட்சுமி பள்ளி மாணவ, மாணவிகளிடம் யோக பயிற்சிகள் மற்றும் அதன் பலன்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து மாணவ, மாணவியர் பின் பற்றுவதற்கு எளிய தியான முறைகளைக் கற்பித்தார்.நவீன உலகில் ஏற்படும் கவனச் சிதறலிலிருந்து விலக தினசரி தியானம் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.அதன் மூலம் எளிதில் பாடங்களைப் புரிந்து படிக்க முடியும் என்பதை அறிவுறுத்தினார். பின்னர் யோகப் பயிற்சி, தியான முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார். மாணவ, மாணவியர்களுடன் யோகா, தியானம் குறித்து கலந்துரையாடல் நடந்தது.