உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 24 மணி நேர வாகன சோதனை; சர்வ கட்சியினரிடம் தகவல்

24 மணி நேர வாகன சோதனை; சர்வ கட்சியினரிடம் தகவல்

திருப்புத்துார் : திருப்புத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் 24 மணி நேர வாகன சோதனை தீவிரமாக நடத்த அறிவுறுத்தப்பட்டது.சட்டசபைத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணபெருமாள் தலைமை வகித்தார். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கினர். தாசில்தார்கள் மாணிக்கவாசகம், அந்தோணி, இன்ஸ்பெக்டர்கள் முருகதாஸ், தீபா, சித்ரா, சுந்தரி, எஸ்.ஐ.,க்கள்,வருவாய் துறையினர், பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !