உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்ட கோயில்களில் ஆஞ்சநேயருக்கு அபிேஷகம்

சிவகங்கை மாவட்ட கோயில்களில் ஆஞ்சநேயருக்கு அபிேஷகம்

சிவகங்கை : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடைபெற்றது.சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வடைமாலை சார்த்தி அபிேஷக, ஆராதனை செய்தனர். சிவகங்கை செட்டியூரணி கரையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. சிவகங்கை அருகே வந்தவாசி ரோட்டில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்ச முக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். காரைக்குடி அருகே ஆவுடையபொய்கையில் உள்ள ஜெயவீர ஹனுமன் கோயிலில் ஆஞ்நேயருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. சுவாமிக்கு வடைமாலை பிரசாதம் படைத்தனர். பக்தர்களுக்கு விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கினர்.* காரைக்குடி சந்தான கணபதி, சஞ்சீவி ஆஞ்சநேயர் பக்த சபா சார்பில் அனுமன் ஜெயந்தி மஹோத்ஸவம் ஜன.12 வரை நடைபெறுகிறது. தினமும், சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு ஸகஸ்ர நாம அர்ச்சனையும், மாலையில் காரைக்குடி செக்காலை சங்கர மணி மண்டபத்தில் கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது. தினமும் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு, வடை மாலை ஸகஸ்ர நாம அர்ச்சனை நேற்று காலை, சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும் சகஸ்ர நாம அர்ச்சனை, மாலையில் சிறப்பு அலங்கார ஆராதனை நடந்தது.காரைக்குடி பர்மா பஜார் ஜெயவீர ஆஞ்சநேயர் டிரஸ்ட் சார்பில் ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து எட்டு வடை மாலை சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.ஆவுடையப்பொய்கை ஜெயவீர அனுமன் கோயிலில், சிறப்பு அபிஷேக ஆராதனை வடை மாலை சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.திருப்புத்துார் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடைதிறந்து திருப்பள்ளியெழுச்சி பூஜை நடந்தன. தொடர்ந்து காலை 8:00 மணிக்கு மூலவருக்கு அபிேஷகம் நடைபெற்றது. பின்னர் ராஜஅலங்காரத்தில் மலர்களுடன், வெற்றிலை, வடைமாலையுடன் அருள்பாலித்தார். அலங்காரத் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அலங்காரத்தில் எழுந்தருளிய உற்ஸவருக்கும் தீபாராதனை நடந்தது.மாலை 4:00 மணிக்கு வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். இரவில் உற்ஸவர் தீபாராதனையும் தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் திருவீதி உலா வந்தார்.திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் பக்த ஆஞ்சநேயருக்கு காலை 10:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணி அளவில் திருவாராதனம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு மூலவர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.* மானாமதுரை வீர அழகர் கோயிலில் உள்ள வீர ஆஞ்சநேயர் சன்னதியில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றன.தொடர்ந்து மூலவருக்கும், உற்ஸவர் அனுமனுக்கும் வடை மாலை, வெற்றிலை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகளை அர்ச்சகர் கோபி மாதவன் நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை