உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் இன்ஸ்பெக்டர்அரசு ஊழியர்கள் வாக்குவாதம்

சிவகங்கையில் இன்ஸ்பெக்டர்அரசு ஊழியர்கள் வாக்குவாதம்

சிவகங்கை ; சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சங்கத்தினர் கை மைக்கை பயன்படுத்தி கோஷங்கள் எழுப்ப முயன்றனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி மைக்கை பயன்படுத்தி கோஷம் எழுப்பக் கூடாது. மைக் பயன்படுத்த இந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மைக்கை பயன்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள் என்றார்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் இது டெசிபில் குறைவான மைக் தான். இந்த மைக்கை பயன்படுத்துவதால் தொந்தரவு ஏற்படாது. இதை பயன்படுத்தி தான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.மைக்கை பயன்படுத்த இன்ஸ்பெக்டர் மறுத்ததால் அரசு ஊழியர்களுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அரசு ஊழியர்கள் இன்ஸ்பெக்டரை கண்டித்து கோஷம் போட துவங்கினர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமியை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோரி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ