உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குப்பை பிரச்னையில் கோட்டாட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதம்

குப்பை பிரச்னையில் கோட்டாட்சியரை முற்றுகையிட்டு வாக்குவாதம்

தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சியில் சேகரமாகும் குப்பையை கொட்ட இடம் கேட்டு முற்றுகை போராட்டம் நடந்தது.தேவகோட்டையில் சேகரமாகும் குப்பைகளை தேவகோட்டை ரஸ்தாவில் கொட்ட நகராட்சிக்கு அரசு பட்டா வழங்கி உள்ளது. பாதை அடைக்கப்பட்டதால் 13 ஆண்டுகளாக கொட்டி வந்த குப்பையை நகராட்சியினரால் கொட்ட முடியவில்லை.மாற்று ஏற்பாடாக கொடுத்த இடத்திலும் கோர்ட் தடை உத்தரவு காரணமாக அங்கும் குப்பையை கொட்ட முடியவில்லை.நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில், அனைத்து கட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர், அமைப்பு நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் பால்துரையை முற்றுகையிட்டு குப்பை கொட்டும் இடத்திற்கு பாதை கேட்டு மனு கொடுத்தனர்.ஆக்கிரமிப்பை அகற்றி தங்கள் இடத்திற்கு பாதை ஏற்படுத்த பேசிய போது அதிகாரிகளுக்கும் நகர் பிரமுகர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.டி.எஸ்.பி. பார்த்திபன் சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக பேசினார். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் பால்துரை மாவட்ட கலெக்டரிடம் (நேற்று) பேசி முடிவு செய்வதாக கூறியதால் கலைந்து சென்றனர்.

தொடர் போராட்டம்

நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் கூறுகையில், சரியான முடிவு இல்லை எனில் இன்று உண்ணாவிரதம், மறியல் என தொடர் போராட்டமாக நடத்த உள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி