உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  நெற்குப்பையில் நுாலக வார விழா

 நெற்குப்பையில் நுாலக வார விழா

நெற்குப்பை: நெற்குப்பை சோம.லெ நினைவு கிளை நுாலகத்தில் 58வது தேசிய நுாலக வார விழா நடந்தது. நுாலகர் பாஸ்கரன் வரவேற்றார். தலைமையாசிரியர் கருப்பையா வாழ்த்தினார். பேராசிரியர் சே.குமரப்பன் எழுதிய அப்துல் கலாம் பற்றிய ஆயிரம் தகவல்கள்' குறித்து மாணவர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நாச்சம்மை வைரவன் மாணவ வாசகர் விருது புதுக்கோட்டை ஜே.ஜே. கல்லுாரி மாணவி திவ்யதர்ஷினி, வாசகர் வட்ட லே.முருகப்பனுக்கும் வழங்கப்பட்டது. ராம சாத்தப்பன் செட்டியார் நினைவு நல் மாணவ வாசகர் விருது நெற்குப்பை ஊ.ஒ.தொடக்கப்பள்ளி 3ம் வகுப்பு மாணவன் சாய் சரணுக்கும், சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவி தேன்மொழிக்கும் வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை