| ADDED : ஜன 15, 2024 10:56 PM
மானாமதுரை, : மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் சர்வீஸ் ரோட்டில் இரு தனியார் பஸ்கள் உரசிக்கொண்டு சிக்கியதால், அந்த ரோட்டில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தன.மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் மதுரை ராமேஸ்வரம் 4 வழி சாலை செல்கிறது.இதனை ஒட்டி இருபுறங்களிலும் சர்வீஸ் ரோடு உள்ளது.இந்நிலையில் மானாமதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சர்வீஸ் ரோட்டில் சிவகங்கையிலிருந்து மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் வந்த தனியார் பஸ்சும், மானாமதுரையிலிருந்து சிவகங்கை சென்ற தனியார் பஸ்சும் எதிரெதிரே உரசிக்கொண்டு செல்ல முடியாமல் நடுரோட்டில் நின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.இது குறித்து பயணிகள் கூறியதாவது, டிரைவர்கள் அவசரமாக செல்லும் நோக்கில் கண்மூடித்தனமாக பஸ்களை இயக்கி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. ஆகவே போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அதி வேகமாக செல்லும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.