உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருப்புத்துார் கோயில்களில் சம்பக சஷ்டி விழா

 திருப்புத்துார் கோயில்களில் சம்பக சஷ்டி விழா

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் பைரவருக்கு சம்பகசஷ்டி விழா துவங்கியது. ந.வைரவன்பட்டியில் நவ.25ல் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த திருத்தளிநாதர் கோயிலில் பைரவர் யோகத்தில் அமர்ந்த நிலையில் மேற்கு நோக்கி எழுந்தருளுகிறார். இவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் சம்பகசஷ்டி விழா ஆறுநாட்கள் நடைபெறும். நேற்று காலை 10:30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. பாஸ்கர் குருக்கள்,ரமேஷ் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்களால் அஷ்டபைரவர் யாகம் நடத்தப்பட்டது. பின்னர் பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் யோகபைரவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளி கவசம் அணிந்து விபூதிக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பின்னர் நடந்த அலங்காரத் தீபாராதனையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மீண்டும் மாலை 5:30 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம் துவங்கியது. பூர்ணாஹூதி நடந்து மூலவர் அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆறு நாட்களிலும் காலை,மாலை இரு வேளைகளில் அஷ்டபைரவ யாகம்,அலங்கார தீபாராதனை நடைபெறும். ந.வைரவன்பட்டியில் நவ.25ல் சூரசம்ஹாரம் ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் காப்புக்கட்டி சம்பகசஷ்டி விழா துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு ேஹாமம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு மேல் பைரவர் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்தார். தினசரி காலையில் ேஹாமம், இரவில் சுவாமி புறப்பாடு நடைபெறும். நவ.25ல் சூரசம்ஹாரம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி