உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கருகிய பயிர்களுக்கு இழப்பீடு கோரிக்கை

கருகிய பயிர்களுக்கு இழப்பீடு கோரிக்கை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே தண்ணீர் பற்றாக்குறையால் கருகிய பயிர்களுக்கு விவசாயிகள் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.இத்தாலுகாவில் சிங்கம்புணரி, பிரான்மலை, அய்யாபட்டி, எஸ்.எஸ்.கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர் நெல் சாகுபடி செய்திருந்தனர். சில இடங்களில் முன்கூட்டியும் பல இடங்களில் தாமதமாகவும் நடவுப் பணிகளை மேற்கொண்டு இருந்தனர். ஆனால் பருவம் தவறி பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் பயிர் விளைச்சல் பாதித்தது. பூச்சி தாக்குதல் காரணமாகவும், தண்ணீர் பற்றாக்குறையாலும் பயிர் கருகியது. இதனால் வயல்களில் காய்ந்த பயிர்களை மாடுகளை விட்டு விவசாயிகள் மேயவிட்டுள்ளனர். விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடை பெற்றுத்தர வேளாண் அதிகாரிகளிடம் விவசாயிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை